Thursday, December 31, 2009

கல்வித் துளிர்

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா? ... என்னடா இளையராஜா பாட்டைப் பாடறேன்னு நினைக்கிறீங்களா?. வசிப்பது அமெரிக்காவில் என்றாலும் வளர்ந்தது என்னவோ மறவபாளையத்தில்.கணினியில் கவிதை பாடினாலும், கழனியில் கதிரறுத்த நினைவுகளை நெஞ்சம் மறப்பதில்லை. படிச்சது தமிழ் வழிக் கல்வியில். என்னோட அரைகுறை ஆங்கிலத்துக்கு A ,B, C சொல்லிக் கொடுத்தவர் திரு. சிவப்ரகாசம். அவரே 15 வருடங்கள் கழித்து மறவபாளையம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வந்தார். ஆசிரியரிடம் பேசிய கதையைப் பேசப் போய், ஏதாவது உருப்படியாய் செய்வோம் என நினைத்தோம் நானும் என் தம்பியும். ஊர் கூடி தேர் இழுக்கும் கதையாய் ஆரம்பித்து விட்டோம் கல்வித் துளிர் என்னும் முன்னாள் மாணவர்கள் அமைப்பை. மறவபாளையம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு. சிவப்ரகாசம், ஆசிரியர் திரு. ராஜசேகர், திரு. நல்லசிவம் (NN Engineering Products, Covai) , திரு. பெரியசாமி ( Gomala textiles, Thirupur), திரு. கந்தசாமி (Thirumurugan traders, Chennimalai ) என் சகோதரர்கள் திரு. கதிரவன், திரு. மதியழகன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் முதலடியை எடுத்து வைத்துள்ளோம்.

பணம் என்னும் மாயக்காரனால் பள்ளிக் கல்வி மறுக்கப்படும் அனைவருக்கும் உதவுவதும், இயற்கை விவசாயம், சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக உழைப்பதும் எங்களின் நோக்கம். மறவபாளையத்தில் வேர் விட்டு உலகெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் நாங்கள் தற்போது வேரைத் தாங்கும் விழுதுகளாய் முளைக்கத் தொடங்கியுள்ளோம். வரும் காலங்களில் எங்களின் விழுதுகள் பக்கத்துக் கிராமங்களுக்கும் வேர் பிடிக்கும்.

விரும்பினால் எங்களுடன் இணைய : kalvithulir@gmail.com

பசுஞ்சோலை

தமிழ்நாடு அரசு வனத்துறை இலவசமாகக் கொடுக்கும் மரக்கன்றுகளை மண்ணை நேசிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு மரக்கன்று வீதம் கொடுத்து வளர்க்கச் சொல்லப் போகிறோம். மரம் வளர்ப்பைக் கண்காணிக்கும் பொறுப்பை தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. ராஜசேகர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு அரையாண்டுக்கும் கணக்கெடுக்கப்பட்டு, நன்கு வளர்த்த மாணவருக்கு பரிசாக ஒராண்டுக்கான கல்விக் கட்டணம், பொது அறிவுப் புத்தகங்கள், நோட்டுக்கள், உடைகள் வழங்கப்படும்.

தனியே தன்னந்தனியே..!

http://www.nilacharal.com/ocms/log/10260910.asp

நீங்கள் இளகிய மனம் உடையவராகவோ அல்லது வீட்டில் தனியே அமர்ந்து நிலாச்சாரலைப் படிப்பதாகவோ இருந்தால் தயவு செய்து இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். உங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நான் பொறுப்பில்லை!!

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் சென்னையில் இருந்தாலோ அல்லது நீங்கள் சென்னைவாசியாக இருந்தாலோ, நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய விஷயம் இது. முக்கியமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே வசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது!!

சில நாட்களுக்கு முன் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு என் வீடு இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பஸ் ஸ்டாப்பில் நான் இறங்கியபோது மணி நள்ளிரவு 12.

பஸ் ஸ்டாப்பிலிருந்து என் வீட்டிற்கு சுமார் அரை மைல் நடக்க வேண்டி இருந்தது. திகில் படத்தில் இருப்பது போல மிரட்டும் இரவில், வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே, பயத்துடன் நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் போனதும் ஒரு வயதான முதியவர் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பல நாள் தாடியுடனும் பெரிய சிவந்த விழிகளுடனும் பயங்கரத் தோற்றத்தில் இருந்த அவரைப் பார்த்ததும் பயம் மேலும் அதிகரித்தது.

பாட்டி சொன்ன பேய்க் கதைகளும், படித்துத் தெரிந்து கொண்ட பிசாசுகளும் நேரங்கெட்ட நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைத்தன. முதியவர் என்னைப் பார்க்கும் முன் எதிர் சந்தில் ஓடிவிடலாம் என நினைக்கையில், அந்த முதியவர் என்னை அழைத்தார்.

“ஏலே பேராண்டி, ஒரு புத்தகம் வாங்கிட்டுப் போலாம் வாடா! “

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

(சுவையான மின்னஞ்சல் ஒன்றின் தமிழாக்கம்!)

http://www.nilacharal.com/ocms/log/09280910.asp

பில்: பொது நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெறாதவர்கள் வெளியேறலாம்.

தற்போதும் 2000 பேர் வெளியேற, ரமேஷ் மீண்டும் தனக்குத்தானே அதே பதிலைச் சொல்லிக் கொள்கிறார்.

இப்படியே எல்லோரும் வெளியேற, கடைசியில் ரமேஷும் இன்னொருவரும் மட்டும் இருக்கிறார்கள்.

பில்: முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய மொழி தெரியாதவர்கள் வெளியேறலாம்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, "உங்கள் இருவருக்கும் ஆதி காலத்து மொழி தெரியுமெனில் அதில் எனக்கு உரையாடிக் காட்டுங்கள்" என்றார் பில்.

ரமேஷ்: எந்த ஊரு மாப்ளே?

இன்னொருவர் : திருச்சி பக்கம் மச்சி!

Sep 28 2009, nilacharal.com

நினைவுச் சங்கிலி

http://www.nilacharal.com/ocms/log/08240912.asp

தொலைபேசியின் தொடர்ச்சியான அழைப்புகள்...
தொலைத்தூர பயணத்தின் துணை வரும் பெண்ணொருத்தி...
'டேய்!' எனச் சொல்லி அழைக்கும் நண்பன்...
'டா' போட்டு அதிகாரம் செய்யும் தங்கை என
ஏதோ ஒன்று எப்போதும் உன்னையும்
என்னையும் உயிராய் இணைக்கிறது.

நான் இருப்பினும் இறப்பினும் தொடரும்
நினைவுச் சங்கிலி அறுவது எப்போது?

சிங் இஸ் கிங்

http://www.nilacharal.com/ocms/log/07130909.asp


(மின்னஞ்சலில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கற்பனை நிகழ்வின் தழுவல்)

உடனே புனித நீரை எடுத்த பாதர், "சீக்கியராக பிறந்து, சீக்கியராக வளர்ந்த நீங்கள், தேவலாயப் புனித நீர் உங்கள் மீது தெளிக்கப்படுவதன் மூலம் கிறிஸ்தவராகிறீர்கள்" எனக் கூறி நீரைத் தெளித்துவிட்டு கிளம்பினார்.

ரொம்ப நாட்களாய் சிங்கின் தந்தூரியை நினைத்துக் கொண்டு ஜெபம் சொல்லிக் கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், இனி நிம்மதியாய் தேவனை ஆராதிக்கலாம் என நிம்மதிக் கொண்டனர்.

அடுத்த வெள்ளி மாலை.

மீண்டும் சிங்கின் தந்தூரி வாசம். கோபமடைந்த கிறிஸ்தவர்கள், பாதிரியாருடன் சிங்கின் வீட்டிற்கு வந்தனர்.

"கத்தோலிக்கராக மாறிவிட்ட நீங்கள், இன்று சிக்கன் சாப்பிடக் கூடாதல்லவா? ஏன் மரபை மீறுகிறீர்கள்?" என பாதிரியார் கேட்க, வந்திருந்த அனைவரையும் அமைதியாய் ஒரு முறை பார்த்த சரண் சிங், பாதிரியாரின் கையிலிருந்த புனித நீரை சிக்கன் மீது தெளித்து,"சிக்கனாகப் பிறந்து, சிக்கனாக வளர்ந்த இந்த ஆன்மா, தேவனின் புனித நீர் தெளிக்கப்படுவதன் மூலம் தக்காளியாகவும், உருளைக் கிழங்காகவும் மாற்றப்படுகிறது" என்று கூறிவிட்டு சிக்கனைக் கையிலெடுத்து சுவைக்கத் தொடங்கினார்.

சில்லுனு ஒரு அரட்டை - 1

http://www.nilacharal.com/ocms/log/02090916.asp

ஜோ ஆங்கிலத்தில் சொன்ன பாடலைக் கண்டுபிடிச்சும், நிலாச்சாரலுக்காக நியூஸ்லெட்டர் தயாரித்துக் கொடுத்தும் அரட்டை அரங்கில் பங்கு வாங்கினேன். உங்களில் யாராவது போட்டிக்கு வருவதாய் இருந்தால் என்னைப் போல நேர்வழியில வாங்க!

Don’t look at me! With those pricking eyes!
Don’t go away! Don’t go leaving me!
Love is not a loan to ask back!
This is not a street show to watch it amidst a crowd.
(மாலீக் இந்த முறை போட்டியில் நான் இல்லை!)

என்ன பாட்டுன்னு நீங்க கண்டுபிடிக்கற வரை "அன்பாய் இருங்கள்! ஆரோக்கியமாய் இருங்கள்!" எனக் கூறி போய் வருகிறேன்!

காதலுடன் ஒரு கண்ணாம்பூச்சி

http://www.nilacharal.com/ocms/log/06230815.asp

கள்ளிச் செடியில் மறைந்தவனைக் கசங்காமல் பிடிப்பேன்,
அரளிச் செடியில் மறைந்தவனை அள்ளி அணைப்பேன்,
தாமரைப் பூவில் தங்கியவனைத் தாவிப் பிடிப்பேன்,
ஓரிடமும் விடாமல் ஓடி வந்து ஒளிந்தவர்களை பிடிக்க வருகிறேன்.. வருகிறேன்..

எனக் கூவியவாறு மடமை தேடத் தொடங்கியது.

சோம்பல் அதன் குணத்திற்கேற்ப, ஓடி ஒளிய சோம்பல் பட்டு மடமையின் கால்களுக்கிடையே மறைந்திருந்ததனால் சோம்பலை முதலில் கண்டறிந்தது. பொய், புரட்டு என ஒவ்வொரு குணங்களையும் கண்டுபிடித்தாலும் கடைசி வரை காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. கவர்ச்சி களிப்புடன் மடத்தனத்தை பார்த்துக் கத்தியது, காதல் ரோஜாச் செடியில் ஒளிந்திருப்பதாக. மடமை மின்னலெனப் பாய்ந்து பார்க்கையில், காதலின் கண்களை ரோஜாவின் முட்கள் குத்தியிருக்க, கண்ணீருடன் காதல் நின்றது. அதன் பார்வையும் பறி போனது.

‘காச்..மூச்’ என்ற இந்த சத்தத்தில் கடவுள், குணங்கள் இருந்த அறைக்குள் வந்து நடந்ததை அறிந்து கொண்டார். காதலின் கண்பார்வை போக மடமையே காரணம், அதனால் காதலுடன் மடமை எப்போதும் இருக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

அப்போதிலிருந்து இப்போதுவரை காதலுக்குக் கண் இல்லை, மடமையைப் பிடித்த கைகளை விடுவதுமில்லை.

அடிச்சுவடு அறியாமலே...

http://www.nilacharal.com/ocms/log/04140810.asp

மனிதத்தை நுகர மறுக்கும் மனஊனம்
மலர்விழிகளின் வீழ்ச்சியாம் பார்வையின்மை
குரலோசை புக முடியாத கேளாமை
குறையுடைய உறுப்புகளால் குறையும் செயல்கள்
குன்றாமல் குதித்தெழும் தன்னம்பிக்கை இருப்பின்
கொழுந்தாய் வந்திறங்கி குறையுடனே இருந்து
மனதிலேயே மார்தட்டி மடிகின்ற அவர்கள்
தெய்வத்தின் திருவேட்டில் அச்சுப் பிழைகள்.