Monday, July 26, 2010

ஆசிரியர்கள் நியமனம்

பல தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. 8 வகுப்புக்கள் கொண்ட பள்ளிக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சிறு பகுதின்னு போட்டு ஒரு சில பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கின்றனர்.செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்வதைவிட, இது போன்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்திருக்கலாம். வாக்கு வேட்டைக்காக விமர்சையாக கொண்டாடப்பட்ட விழான்னுதான் எனக்குத் தோன்றுகிறது செம்மொழி மாநாட்டைப் பார்க்கையில்.

எங்கள் ஊர் பள்ளியிலும் ஆசிரியர் பற்றாக்குறை. பள்ளியின் நிலைமையை கூறியதும், வரி சலுகையின்றி பணம் தர என் நண்பர்கள் பலர் முன் வந்தனர். நண்பர்கள் தந்த நம்பிக்கையில் மூன்று ஆசிரியர்களை பணியமர்த்தி உள்ளோம். ஆசிரியர்களுக்கான முதல் மாத சம்பளத்தை திரு.சதீஷ் அவர்கள் தன்னுடைய அலுவலக நண்பர்கள் உதவியுடன் கொடுத்துள்ளார். திரு.சதீஷ் மற்றும் நண்பர்களுக்கு கல்விதுளிர் அறக்கட்டளையின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.