Sunday, February 27, 2011

சுடலைமாடன் கதை


உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள்.

அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று சொல்லிப் புறப்பட்டார்.

ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள்.

எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப்
போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார்
எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன்
கைலாயம் திரும்பினார்.

உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும்
படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்..

"ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும்,
இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும்
அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன்.

"தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை..

"அதெப்படியாகும்?இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது  என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்" என்றார் இறைவன்.

"இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது"

"ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்"

"இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள்
அந்தக் குமிழைத் திறந்தாள்..

Friday, February 25, 2011

தேன் சிட்டு


பறவைகளைக் கூர்ந்து நோக்குதல் (bird watching) என்பது ஒரு ஆனந்தமான பொழுது போக்கு.
 காலை ஆறு மணிக்கு "கீ..வூ...கிக்வூ..கிக்வூ.." என்ற சத்தம் கேட்டு படுக்கை அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன். இரண்டு சிறிய குருவிகள் ஒன்றை ஒன்று துரத்தியவாறு பறந்து கொண்டிருக்கின்றன தோட்டத்தில் உள்ள ஒரு செம்பருத்திச் செடியின் கிளைகளின் ஊடே.

சற்று நேரத்துக்குப் பின் அவை தனது நீண்டு வளைந்த அலகு மற்றும் குழாய் போன்ற நாக்கைக் கொண்டும் செம்பருத்திப் பூவிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன

Thursday, February 24, 2011

தேனீ வாழ்க்கைமுறை மற்றும் தொழில் வாய்ப்புக்கள்

தேள் போன்று கொட்டும் கொடுக்கினைக் கொண்ட இனம். ஆனால் கூடவே அமிர்தமெனத் தேனை நமக்களிக்கும் இனம். அதுதான் தேனீ இனம். அதைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாமா?




உலகிலேயே மிக உன்னதமான ஒரு உணவுப் பொருள் தேன். அது எவ்வளவு நாட்கள் வெளியில் வைத்திருந்தாலும் கெட்டுவிடாது. புளிக்காது. பூஞ்சக் காளான் பிடிக்காது. தேன் உணவுப் பொருள் மட்டுமல்ல. மருந்தும் கூட. குழந்தைக்கு ஜுரம். டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுக்கிறார். கூடவே சொல்கிறார், மாத்திரையை பொடி செய்து தேனில் கலந்து நாக்கில் தடவி விடுங்கள் என்று. குழந்தைகளை மாத்திரை விழுங்க வைப்பதே கஷ்டம் அதிலும் கசப்பு மாத்திரை என்றால் கேட்கவே வேண்டாம். டாக்டர் சொன்னபடி செய்வதில் இரண்டு சௌகரியங்கள். தேனின் தித்திப்பு மாத்திரையின் கசப்பை மறைத்து விடும். கூடவே தேனும் மருந்தாகும்.

புதிய ராணி வந்தவுடன் பழய ராணி பல நூறு வேலைக்காரர்களுடன் சில சோம்பேரிகளையும் அழைத்துக் கொண்டு புது வீடு தேடும் பணியில் ஈடுபடும். முதலில் அவை பழய வீட்டின் அருகிலேயே ஒரு மரத்தை அடைந்து அங்கு இளைப்பாரும். சில வேலையாட்கள் புது இடம் தேடும் பணியில் இறங்குவார்கள். வெளியில் சென்றவர்கள் திரும்ப வருவதற்குள் ராணீத் தேனீயையும் கொஞ்சம் வேலையாட்களையுமாக சேர்த்து ஒரு பெரிய கண்ணாடடி சோதனைக் குழாயை உபயோகித்துப் பிடித்து வலைத் துணியால் மூடி அதை அப்படியே ஒரு காலி தேனீ வளர்க்கும் பெட்டிக்குள் உதறி மூடி விட்டால் சிறிது நேரத்திற்குள் பெட்டியில் இருந்து சில வேலக்கார தேனீக்கள் வெளியே வந்து மற்ற்வர்களை அழைத்து வந்து விடும். ஒரு புதிய தேனீக் குடும்பம் உங்களுக்குக் கிடைக்கும். 

http://kalvithulir.com/index.php/e-learning/67-biology/453-honey-bee

Saturday, February 19, 2011

தலை வணங்குகிறோம் தாயே!

என்ன பிள்ளைகளா,மதிய உணவு சாப்பிட்டீர்களா?’-டீச்சர்


”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.



இதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.

உடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .

இப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்!-இத்தனை நாள்.



இனியில்லை!



அழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது!



அரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா?

அல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா?

இல்லை!இல்லை!



கோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன?

அது தவிர இதனால் என்ன பயன்?அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன?

பின் எப்படி நடந்தது?



11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்!



29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 லட்சம்.



அதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்துதான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை



“எனக்குக் குழந்தைகள் இல்லை.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூறும் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது!



”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்!



மதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.



அந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.



தாயே!உங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்!



இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்
 
Thanks and Regards
 
http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_16.html


Monday, February 14, 2011

February Month Salary

 Mrs .Aruna Muthu, Mr & Mrs. Pradeep and Ms. Thulasi Vishwanathan has paid the salary for the teachers appointed by Kalvithulir.

Through this post we are conveying our hearty thanks to them

Friday, February 4, 2011

பைந்தமிழில் மகாபாரதம் - முன்னுரை


ஒரு முறை அப்பாவின் பெட்டியைச் சுத்தம் செய்யும் பொழுது ஒரு பை எனக்கு கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தால் அதனுள் நாடக ஒப்பனையில் உபயோகப்படுத்தப்படும் சில ஒப்பனைப் பொருட்கள், கரையான் அரித்திருந்த பாஞ்சாலி சபதம் நாடகத்திற்கான பாடல்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகம் என சில என் கண்ணில் பட்டது. அந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் அதில் என் தந்தையின் கையெழுத்து. ஆச்சரியப்பட்டு என் அம்மாவிடம் கேட்க அது அப்பா எழுதியது என்றும் நானும் எனது அண்ணன்களும் பிறக்கும் முன்பு அது எழுதப்பட்டது என்றும் சொன்னார்கள். அப்பாவுடன் கலந்திருந்த மகாபாரத மோகமும் எனது மகாபாரதம் மீதான மோகத்திற்கு காரணமாக இருக்கலாம்.