Wednesday, March 2, 2011

நூலாடைக் கேட்ட கண்ணன்


பிருந்தாவனத்தில் ஜன்மாஷ்டமி உற்சவம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது .எல்லா
பக்தர்களும் அந்த அழகு கண்ணனுக்குப் புத்தாடைச் சார்த்தி மனம் மகிழ்ந்தனர்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர் .அவர் மனதில் தானும் அந்தக் கமலக்கண்ணனுக்கு ஒரு பட்டாடை அணுவித்து அழகுப்பார்க்க எண்ணினார் .

ஆனால் அன்றாடம் உஞ்சவிருத்தி  எடுத்து உண்ணும் அவருக்கு இது சாத்தியமா என்ன?. தன் மனைவியிடம் போய் இதைத்தெரிவித்தார் .

மனைவியோ
"என்ன பேசறேள்? இதெல்லாம் நமக்கு சாத்தியமா? அதான் அந்தக்கிருஷ்ணன்
எல்லா நாளும் புதுப்பட்டு தானே கட்டறான் !அவனுக்கு நாம செய்யலேன்னு
தான் குறையா என்ன?"

"அதில்லே.....வந்து எனக்குத்தான் அப்படி ஒரு ஆசை .சரி உங்கிட்ட இருக்கிற
பித்தளைப்பாத்திரத்தைக் கொண்டு வா"